'இது தீபிகா 2.0!’ - இன்ஸ்டாகிராமில் அசந்துபோன ரன்வீர் சிங் | Ranveer Singh Surprised to after swa the wax statue of Deepika Padukone

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (16/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (16/03/2019)

'இது தீபிகா 2.0!’ - இன்ஸ்டாகிராமில் அசந்துபோன ரன்வீர் சிங்

 

தீபிகா

லண்டன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம்,  'மேடம் டுஸ்ஸாட்ஸ்' ( Madame Tussauds ). இந்த அருங்காட்சியகத்தில் மைக்கேல் ஜாக்சன், சச்சின் டெண்டுல்கர், ரபேல் நடால், விராட் கோலி என உலகப் பிரபலங்கள் பலரது மெழுகுச் சிலைகள் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தில், சமீபத்திய வரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனைப் போலவே அச்சுஅசலாய் இருக்கும் இந்தச் சிலையை நேரில் பார்ப்பதற்காக, தீபிகா படுகோனும், அவரது கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங்கும் மியூசியத்துக்குச் சென்றனர். அப்போது, அந்தச் சிலையுடன் புகைப்படமெடுத்துக்கொண்டனர். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரன்வீர் சிங், 'தீபிகா 2.0 டூ மச் டு ஹேண்டில்' எனப் பதிவிட்டுள்ளார். 


மெழுகுச் சிலையின் முன் நின்று தீபிகா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்த தீபிகாவின் தங்கை அனிஷா, 'ஒன்று போதாதென்று இன்னொன்றா! இரண்டு தொல்லைகள்' என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார். 'இந்தச் சிலையை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று அருங்காட்சியகத்திலிருந்தவர்களிடம்  நகைச்சுவையாய்க் கேட்டிருக்கிறார் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங்.    


[X] Close

[X] Close