பிரமாண்டமான செட்... பாரதிராஜாவின் விருந்து - இறுதிக்கட்டத்தை எட்டும் `கென்னடி கிளப்'! | Director Barathiraja treats the cast and crew of Kenndy Club

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (16/03/2019)

கடைசி தொடர்பு:19:45 (16/03/2019)

பிரமாண்டமான செட்... பாரதிராஜாவின் விருந்து - இறுதிக்கட்டத்தை எட்டும் `கென்னடி கிளப்'!

`ஜீனியஸ்' படத்துக்குப் பிறகு, `ஏஞ்சலினா', `சாம்பியன்' ஆகிய படங்களை இயக்கி முடித்தபின் இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் படம், 'கென்னடி கிளப்'. இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

இதில் சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கெனவே, தன் முதல் படைப்பான `வெண்ணிலா கபடிக்குழு' படத்தின்மூலம் கபடி கதையைச் சொன்ன இவர், இப்படத்தில் பெண்கள் கபடியைக் கதைக் களமாக வைத்திருக்கிறார்.

`பாண்டியநாடு', `பாயும் புலி', `மாவீரன் கிட்டு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, இமான் - சுசீந்திரன் காம்போ இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இந்தியா முழுக்க கபடிக்கு புகழ்பெற்ற இடங்களுக்குப் பயணித்து எடுத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தன் பகுதிக் காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில், படக்குழுவினருக்கு பாரதிராஜா தன் வீட்டில் ஒரு சிறப்பு விருந்து வைத்துள்ளார்.

பாரதிராஜா

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள  ஓர் அறிக்கையில், "இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரமாண்டமான செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட உண்மையான கபடி வீராங்கனைகளும் இதில் நடித்தனர். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று (15.03.2019) அவரது இல்லத்தில், படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close