விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் - விக்ராந்த் காம்பினேஷன்... ஸ்போர்ட்ஸ் கதையை இயக்கும் சஞ்சீவ்? | vishnu vishal and vikranth joins together for sports film

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (16/03/2019)

கடைசி தொடர்பு:20:35 (16/03/2019)

விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் - விக்ராந்த் காம்பினேஷன்... ஸ்போர்ட்ஸ் கதையை இயக்கும் சஞ்சீவ்?

`வெண்ணிலா கபடிக் குழு - 2’, `சுட்டுப் பிடிக்க உத்தரவு’, `பக்ரீத்’ என விக்ராந்த் நடிப்பில் உருவான மூன்று படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இதைத் தொடர்ந்து, தன் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதற்கு முன், இவர் `தாக்க தாக்க’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டூயல் ஹீரோ கதையில் உருவாகும் இந்தப் படத்தில் விக்ராந்த்துடன் இணைந்து விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார்.

விக்ராந்த்

கிரிக்கெட்தான் எங்களை நண்பர்களாக்கியது என்றும் தான் விக்ராந்த்துடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றும் பல பேட்டிகளில் விஷ்ணு தெரிவித்திருக்கிறார். இதுவும் விளையாட்டை மையப்படுத்தின படமாம். இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் இது கிரிக்கெட் தொடர்பான கதையாகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கான வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பதுதான் ஸ்பெஷல். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. தவிர, பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் `காடன்’ படத்தின் தமிழ், தெலுங்கு வெர்ஷனில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close