18 வருடங்களில் முதன் முறையாக `96’ படம் வெல்லும் விருது! | 96 wins this award for best debut director in 18 years

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (17/03/2019)

கடைசி தொடர்பு:12:10 (17/03/2019)

18 வருடங்களில் முதன் முறையாக `96’ படம் வெல்லும் விருது!

96

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. சமந்தா, ஷர்வானந்த் நடிக்கவிருக்கும் '96' தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது.

பிரேம் குமார்

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக்  கொடுக்கப்படும்  சிறந்த அறிமுக இயக்குநர்க்கான விருதை  96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார். 1992ல் தனது முதல் படமான 'பிரமே புஸ்தகம்' என்னும் படத்தை இயக்கும்போது ஶ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். 

மாருதி ராவ்

இப்படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும்  'கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் தேசிய விருது' விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001ற்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close