`சிறப்பான செய்தி விரைவில் வெளிவரும்!’ - அசுரன் படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் | gv prakash on asuran music works

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (17/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (17/03/2019)

`சிறப்பான செய்தி விரைவில் வெளிவரும்!’ - அசுரன் படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ்

அசுரன்

'மயக்கம் என்ன' படத்தில் தனுஷ்காக இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ், அதன் பிறகு இருவருக்கும் மோதல் எனத் தகவல்கள் வந்த நிலையில் தனுஷ்- ஜிவி பிரகாஷ் காம்போ மீண்டும் இணைகிறது. ஜி.வி பிரகாஷ்  நடித்து இசையமைத்து வரும் 'ஜெயில்' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் தனுஷ். அதைத் தொடர்ந்து,`பொல்லாதவன்', `ஆடுகளம்' படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி பிரகாஷ் கூட்டணி நீண்ட நாள்களுக்கு மூன்றாவது முறையாக `அசுரன்' படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.

ஜி.வி.பிரகாஷ் -தனுஷ்

'படத்தின் பாடல்களுக்கான வேலைகள் தற்போது தொடங்கிவிட்டது. மிகவும் சிறப்பான செய்தி விரைவில் வெளிவரும் 'என ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் உற்சாகத்தில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.  

`அசுரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.  மலையாள நடிகை மஞ்சு வாரியர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   பசுபதி, பவன் மற்றும் `ஆடுகளம்' நரேனும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர். `திருடா திருடி', `யோகி', `சீடன்'  போன்ற படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவா படத்தில் வழக்கறிஞராகவும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆய்வாளராக நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், படத்தில் தனுஷின் மகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகை தருகிறார், கென் கருணாஸ்.

 


[X] Close

[X] Close