அதர்வாவின் `தீக்காய' கெட்டப்! - மிரளவைக்கும் `பூமராங்' மேக்கிங் | boomerang film making video

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (18/03/2019)

கடைசி தொடர்பு:12:10 (18/03/2019)

அதர்வாவின் `தீக்காய' கெட்டப்! - மிரளவைக்கும் `பூமராங்' மேக்கிங்

'இவன் தந்திரன்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், `பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை, `மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில், இயக்குநர் கண்ணன் தயாரித்துள்ளார். விவசாயத்தைப் பற்றியும் நதிநீர் இணைப்பு பற்றியும் பேசியிருக்கும் இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதர்வா

இந்தப் படத்தில் முகத்தில் தீக்காயம் ஏற்பட்ட நபராக அதர்வா ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். அதற்காக கைத்தேர்ந்த பிராஸ்தடிக் மேக்கப் கலைஞர்களைக் கொண்டு அவருக்கு தலை முழுவதும் மேக்கப் போடப்பட்டது. தான் நடித்த படங்களில் பிராஸ்தடிக் மேக்கப் உடன் நடித்தது இதுவே முதல் முறை. அவர் இந்தக் கேரக்டருக்கு எப்படித் தயாராகிறார், ஒப்பனைக் கலைஞர்கள் அவருக்கு எப்படி தீக்காயம் ஏற்பட்டது போலான முகத்தை வரவைக்கிறார்கள் என்பதை படக்குழு வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சினிமா விகடன்  யூ டியூப் சேனலில் பார்க்கலாம். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க