‘இந்தப் பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ஃபேக் ஐடி’- வைரல் ட்வீட்க்கு குறளரசன் விளக்கம் | kuralarasan says about that twitter account

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (18/03/2019)

கடைசி தொடர்பு:18:02 (18/03/2019)

‘இந்தப் பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ஃபேக் ஐடி’- வைரல் ட்வீட்க்கு குறளரசன் விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல்  விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக்கட்சிகள் பற்றிய அறிவிப்பும், தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களையும் கட்சிகளின் தலைமை வெளியிட்டு வருகின்றன. தற்போது, நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்களும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இதுவரை இருந்த இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இன்றைய அரசியல் களத்தில் இல்லாததே ஆகும். 

குறளரசன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்பும் தமிழக மக்களிடம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடந்துவரும் அரசியல் நிகழ்வுகள் யாவும், இந்த இரு பெரும் தலைவர்களின் பெயர்களை வைத்தே நடந்தேறிவருகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் ட்விட்டரில் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் குறளரசன் எனப் பெயரிடப்பட்ட பதிவுகள் வைரலாகிவந்தன. அதில் ஒரு பதிவாக, அஜித்தை அரசியலுக்கு அழைத்திருந்தார் சுசீந்திரன். இதற்குப் பதில் தரும்படியாக குறளரசன் எனப் பெயர் இடப்பட்ட பதிவிலிருந்து 'எங்க அப்பாதான் அடுத்த முதல்வர்' என்று ட்வீட் வந்திருந்தது. அதேபோன்று, தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய தி.மு.க 234 தொகுதிகளில் கைப்பற்றும் எனவும் ட்வீட்டுகள் வந்திருந்தன. இதற்கு, பலரும் கிண்டலாகப் பதிவுகள் செய்திருந்தனர். இந்த ட்விட்டர் ஐடி, குறளரசனுடையதுதானா என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து குறளரசனிடமே கேட்டோம். 

குறளரசன்

'' இந்தப் பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இதொரு ஃபேக் ஐடி'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது. லட்சிய தி.மு.க நிறுவனத் தலைவர் டி.ராஜேந்திரனின் மகன் குறளரசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க