” `நேர்கொண்ட பார்வை' சமூகத்திற்கு மிகவும் தேவையானது!" - ரங்கராஜ் பாண்டே | Rangaraj Pande says about Ajith and Nerkonda Paarvai

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (18/03/2019)

கடைசி தொடர்பு:18:20 (18/03/2019)

” `நேர்கொண்ட பார்வை' சமூகத்திற்கு மிகவும் தேவையானது!" - ரங்கராஜ் பாண்டே

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீ-மேக்தான் இது. அஜித்துடன் இணைந்து ரங்கராஜ் பாண்டேவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் சமூகவலைதளத்தில் லைவ் சாட்டில் வந்த இவர், படத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார். 

நேர்கொண்ட பார்வை

அதில், ``படத்தில் சொல்லப்படும் கரு, தற்போதைய சமூதாயத்திற்கு மிகவும் தேவையானது. அந்தப் படத்தில் நான் நடித்து முடித்துவிட்டேன். கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அஜித் குமார் எல்லோரும் சொல்வது போல ரொம்பவே அற்புதமான மனிதர். அவர் பழகும் விதமே ரொம்ப ஆச்சர்யத்துக்குரியதாக இருக்கிறது. அவர் பழக்கூடிய நண்பர்களுக்கு உயிரைக் கூட கொடுப்பார். பதினைந்து நாள் காலையிலிருந்து மாலை வரை அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்று பேசியிருந்தார். மேலும் படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், வித்யா பாலன், ஆதிக் ரவிசந்தர் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1 அன்று படம் வெளியாவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், ஏதோ சில காரணங்களால் படத்தில் ரிலீஸ் மே இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழுக்காக ஒரிஜனல் வெர்ஷனில் கதையிலும் காட்சியமைப்புகளிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.