''பொள்ளாச்சி சம்பவத்தால் நிச்சயதார்த்த பார்ட்டிக்கு நோ சொன்ன விஷால்'' - குட்டி பத்மினி நெகி்ழ்ச்சி | Actor Vishal cancelled his engagement party... why?

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (18/03/2019)

கடைசி தொடர்பு:17:55 (18/03/2019)

''பொள்ளாச்சி சம்பவத்தால் நிச்சயதார்த்த பார்ட்டிக்கு நோ சொன்ன விஷால்'' - குட்டி பத்மினி நெகி்ழ்ச்சி

''அனிஷா ரொம்ப வசதியான பொண்ணா இருந்தாலும் எனக்கு அடக்கமான பொண்ணாதான் மனசுக்கு தோணுச்சு.''

சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த நடிகர் விஷால் - அனிஷா ரெட்டி நிச்சயதார்த்தத்தில், நடிகை குட்டி பத்மினியும் கலந்து கொண்டு, அவர்களை வாழ்த்தியிருந்தார். வருங்கால தம்பதியரைப் பற்றி சொல்லுங்கள் என்றோம். மகிழ்ச்சியாகப் பேசினார். 

விஷால் நிச்சயதார்த்தம்

''விஷால் அம்மாவும் நானும் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.  அதனால், விஷாலும் என் பிள்ளை மாதிரிதான். எனக்கு போன்பண்ணி, ' என் என்கேஜ்மென்ட்டுக்கு நீங்க கண்டிப்பா வரணும் அம்மா'னு சொல்லியிருந்தார். பிள்ளை நிச்சயத்துக்கு அம்மா போகாமலா? போயிருந்தேன். அனிஷா ரொம்ப வசதியான பொண்ணா இருந்தாலும்  எனக்கு அடக்கமான பொண்ணாதான் மனசுக்குத் தோணுச்சு. விஷால் என்னை அனிஷாகிட்டே, 'இவங்களும் என் அம்மா'ன்னு அறிமுகம் செஞ்சதும், உடனே அந்தப் பொண்ணு என் காலைத் தொட்டு கும்பிட்டுட்டாங்க. விஷாலும் என்கிட்டே ஆசீர்வாதம் வாங்கினார். இவ்ளோ பெரிய ஸ்டேட்டஸில் இருக்கிறவங்க இவ்வளவு எளிமையா இருக்காங்களேன்னு  எனக்கு மனசு ரொம்ப நெகிழ்ந்துபோச்சு. 

விஷால் - அனிஷா

விஷாலைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் சொல்லியே ஆகணும். நிச்சயதார்த்தம் நடந்த அன்னிக்கு ஈவினிங், ஒரு பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணியிருந்தார். ஆனால், அந்த நேரத்துல பொள்ளாச்சி சம்பவம் நடந்துட்டதால, 'எல்லாப் பக்கமும் ஒரே துக்கமா இருக்கிற நேரத்துல இந்த மாதிரி என்ஜாய்மென்ட் எல்லாம் வேண்டாம்'னு அந்த பார்ட்டியை கேன்சல் பண்ணிட்டார். ஒரு அம்மாவா விஷாலைப் பற்றி நான் ரொம்ப பெருமைப்படறேன்'' என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் குட்டி பத்மினி.