விஷால் படத்தில் நெகட்டிவ் ரோலில் தமன்னா! | Actress tamanaah negative role in vishal movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (19/03/2019)

விஷால் படத்தில் நெகட்டிவ் ரோலில் தமன்னா!

சிம்புவை வைத்து 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை இயக்கினார் சுந்தர் சி. ‘அத்தரண்டிகி தாரேதி' தெலுங்கு ரீமேக்கான இந்தப் படம் தமிழில் சரியாக ஓடவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் விஷாலை வைத்து சுந்தர் சி இயக்கப்போவதாக தகவல்கள் வந்தன. மேலும், இந்தப் படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் தமன்னா இருவரும் கமிட் ஆகியுள்ளனர். முன்னதாக, விஷாலும் தமன்னாவும் 'கத்தி சண்டை' படத்தில் ஏற்கெனவே இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமன்னா

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தில், தமன்னாவின் ரோல் நெகட்டிவ்வாக இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என கூறப்பட்டுவந்த நிலையில்,ஏதோ காரணத்தால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகாத நிலையில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம், படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற்றிருக்கிறதாம்.

தமன்னா

விஷால் நடிப்பில் 'அயோக்யா' படம் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.  நடிகை தமன்னா, நடிப்புக்கு முக்கியத்துவம்கொடுக்கும் கேரக்டரில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க