அஜித் படத்தைத் தொடர்ந்து, போனி கபூர் ரீமேக் செய்யவிருக்கும் பாலிவுட் படம்! | boney kapoor bought the remake rights of hit film badhai ho

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:35 (19/03/2019)

அஜித் படத்தைத் தொடர்ந்து, போனி கபூர் ரீமேக் செய்யவிருக்கும் பாலிவுட் படம்!

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் ஹிட்டான 'பிங்க்' படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்ற போனி கபூர், தமிழில் அஜித்தை வைத்து தயாரித்துவருகிறார். எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படத்திற்கு, 'நேர்கொண்ட பார்வை' எனப் பெயரிட்டுள்ளனர். வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

போனி கபூர்

இந்தப் படத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'பதாய் ஹோ' படத்தை அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார், போனிகபூர். அமித் ஷர்மா இயக்கத்தில் காமெடி ஜானரில் வெளியான இந்தப் படம், 200 கோடி ரூபாய் வசூல் அள்ளியது. தற்போது, அவர் தயாரிப்பில் அமித் ஷர்மா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதுப் படத்தில் அஜய் தேவ்கன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இது, சையது அப்துல் ரஹிம் எனும் கால்பந்து வீரரின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க