20 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சஞ்சய் லீலா பன்சாலி - சல்மான் கான் கூட்டணி! | director sanjay leela bhansali and salman khan will work together after 20 years

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (19/03/2019)

கடைசி தொடர்பு:19:25 (19/03/2019)

20 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சஞ்சய் லீலா பன்சாலி - சல்மான் கான் கூட்டணி!

 

சல்மான்கான்

'பாஜிராவ் மஸ்தானி', 'பத்மாவத்' உள்ளிட்ட பல பாலிவுட் படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர், சஞ்சய் லீலா பன்சாலி. இவர், அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சல்மான் கான். இவர்களது காம்போவில், 'காமோஷி' (1996), 'ஹம் தில் தி சூக்கே சனம்' (1999) ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதைத் தொடர்ந்து பன்சாலி, ரன்பீர் கபூரை வைத்து இயக்கிய 'சாவரியா' என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார், சல்மான். அதன் பின், இந்தக் கூட்டணி இணையவே இல்லை. தற்போது, 'இன்ஷா அல்லா' எனப் பெயரிட்டுள்ள படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, சல்மான்கான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி 2020 ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது. மேலும், கத்ரீனா கைஃப், தபு ஆகியோருடன் 'பாரத்' படத்தின் பணிகளை முடித்துள்ள சல்மான்கான், பிரபுதேவா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தபாங் 3' படத்திற்காகத் தயாராகிவருகிறார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க