கார் டிரைவர், உதவியாளருக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த அலியா பட்! | Alia Bhatt gifts driver and helper

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (19/03/2019)

கடைசி தொடர்பு:19:45 (19/03/2019)

கார் டிரைவர், உதவியாளருக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த அலியா பட்!

அலியா பட்

பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம்வருபவர், நடிகை அலியா பட். பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்துவரும் அலியா பட்டுக்கு, தமிழில் ரசிகர்கள் அதிகம். மேலும், இந்தியில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் இவர், சமீபத்தில் தன்னுடைய 26-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்து சிறப்பித்தனர். இந்நிலையில், இந்தக் கொண்டாட்டம் ஆரம்பிப்பதற்கு முன் அலியா பட் செய்த செயல், சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டுவருகிறது. 

அலியா பட்

இவருக்கு நீண்ட காலமாக கார் ஓட்டுநராக இருக்கும் சுனில் மற்றும் அலியாவின் உதவியாளராக இருக்கும் அன்மோல் ஆகியோருக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள ஐம்பது லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கியுள்ளார். இதனால், இவர்கள் இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல வருடங்களாக இவர்கள் இருவரும் விசுவாசிகளாக இருப்பதால், அலியா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பரிசை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

சல்மான் கான் நடிக்கயிருக்கும் 'இன்ஷா அல்லா' படத்தில் ஹீரோயினாக அலியா பட் கமிட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க