`தளபதி 63' படத்தின் சேட்டிலைட் உரிமம் வாங்கியது சன் டிவி #thalapathy63 | thalapathy63 films satellite rights bagged by suntv

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (19/03/2019)

கடைசி தொடர்பு:18:11 (19/03/2019)

`தளபதி 63' படத்தின் சேட்டிலைட் உரிமம் வாங்கியது சன் டிவி #thalapathy63

'தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய்-அட்லி காம்போ இணையும் படம், 'தளபதி 63'. விஜய், நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, வசனகர்த்தா ரமணகிரிவாசன், பாடலாசிரியர் விவேக் என மெர்சல் படக்குழு மீண்டும் இணைவதால், படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

  விஜய்

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும் ஒரு பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வேண்டிப் போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கைதான், ‘தெறி’. மருத்துவத் துறையில் உள்ள ஊழலை அம்பலப்படுத்தும் சகோதரர்களின் கதையே, ‘மெர்சல்’. அந்த வரிசையில் மூன்றாவதாக வரும் ‘விஜய்-அட்லி’ காம்போவில், கால்பந்து விளையாட்டு சம்பந்தமான  ஒரு ஸ்போர்ட்ஸ் என்டர்டெயினர் ‘தளபதி-63’.

சன் டிவி

இப்படத்தின் ஷூட்டிங், வடசென்னை  காசிமேட்டில் நடந்துவருகிறது. தற்போதைய அப்டேட்டாக, படத்தின்  சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. இதை, சன் டிவி-யின்  அதிகாரபூர்வ  ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமம் தனியாக விற்கப்பட உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.