`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்! | agni devi trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (19/03/2019)

கடைசி தொடர்பு:18:49 (19/03/2019)

`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்!

பாபி சிம்ஹா நடித்துள்ள `அக்னி தேவி' படத்தின் இரண்டாவது  ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அக்னி தேவி மதுபாலா

'மசாலா படம்', 'உறுமீன்' ,`திருட்டுப் பயலே 2', 'சாமி ஸ்கொயர்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிறகு, பாபி சிம்ஹா தற்போது நடித்துவரும் படம் `அக்னி தேவி'. இதில், அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், சதீஷ் முக்கிய பாத்திரம் ஒன்றிலும், மதுபாலா வில்லி வேடத்திலும் நடித்துள்ளனர். 'சென்னையில் ஒரு நாள்' படத்தை இயக்கிய ஜான்பால் ராஜன் மற்றும் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மதுபாலா

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சியாண்டோ ஸ்டூடியோ தயாரித்துள்ளது. அரசியல் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில், பாபி சிம்ஹா போலீஸாக நடித்துள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பியுள்ள மதுபாலாவின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது.

பாபி சிம்ஹா

இதற்கேற்ப, சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லரில் மதுபாலாவின் வசனங்கள், காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. இந்த ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் ட்ரெய்லரைப் போலவே இந்த ட்ரெய்லரும் பரபரப்பான காட்சி, வசனங்களுடன் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க