வாடகைதாரர் அவலங்களைச் சொல்லிய `டு லெட்’ படத்தின் மேக்கிங் வீடியோ! | To let movie making video

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:10 (20/03/2019)

வாடகைதாரர் அவலங்களைச் சொல்லிய `டு லெட்’ படத்தின் மேக்கிங் வீடியோ!

டு லெட்

தமிழ் சினிமாவில் பலமுறை பதிவுசெய்யப்பட்ட வாடகைதாரர் அவலங்களைச் சொல்லும் கதைதான் என்றாலும் 'டு லெட்'டில் அதைக் கவித்துவமாகப் புதிய திரைமொழியில் சொல்லியிருந்தார், இயக்குநர் செழியன். தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்த `டு லெட்.’, சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும் நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல் நேர்மையான படைப்பாகப் பதிவு செய்தது. 

 

 

 

பாடல்களும், பின்னணி இசையும் இல்லாமல் வந்திருந்த இந்தப் படத்துக்கு தமிழ் ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர். செழியன் எழுதிய `டு லெட்’ படத்தின் கதையை எப்படியெல்லாம் படமாக்கினார் என்பதைக் காட்டும் வீடியோ, தற்போது சினிமா விகடன் யூடியூப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.