`` என் ஹேர் ஸ்டைல் ரியலான்னு எல்லோரும் கேட்கிறாங்க! ஆனால்... - ரகசியத்தை உடைத்த `சத்யா' ஆயிஷா  | sathya serial actress ayesha talks about her hairstyle

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:49 (20/03/2019)

`` என் ஹேர் ஸ்டைல் ரியலான்னு எல்லோரும் கேட்கிறாங்க! ஆனால்... - ரகசியத்தை உடைத்த `சத்யா' ஆயிஷா 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `சத்யா'. இந்தத் தொடரிலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆயிஷா. இவர் `பொன்மகள் வந்தாள்' சீரியலின் நாயகியாக நடித்தவர். பின்னர், சன் டிவி-யில் ஒளிபரப்பான 'மாயா' சீரியலில் நடித்தார். தற்போது வித்தியாசமான கேரக்டரில் துணிந்து நடித்துக்கொண்டிருக்கும் ஆயிஷா இந்த தொடருக்காக, தனக்கு வந்த பல வாய்ப்புகளை விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இது குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆயிஷாவிடம் பேசினோம்.

ஆயிஷா

``இதுவரை நான் நடிச்ச தொடரைவிட இந்தத் தொடரில் என்னுடைய நடிப்புத் திறமையை அதிகமாக வெளிக்காட்ட முடியும். தொடரிலில் நான் நடிக்கிற சத்யா கேரக்டரும், நிஜத்தில் என்னுடைய கேரக்டரும் ஒன்றுதான்! செம ஜாலியா எப்பவும் துறுதுறுன்னு இருப்பேன். இந்தக் கேரக்டருக்காக வெயிட் லாஸ் பண்ணியிருக்கேன். அதே மாதிரி, டூப்பெல்லாம் போடாமல் ரியலாகவே சண்டைக்காட்சிகளில் நடிச்சிருக்கேன்.

நிறைய பேர் என்னுடைய ஹேர் ஸ்டைல் ரியலான்னு கேட்குறாங்க. சத்தியமா இல்லங்க. தலையில் அளவெடுத்து விக் செஞ்சு வைச்சிருக்கேன். இப்போவாச்சும் நம்புங்க இது ரியல் இல்ல ரீல்! என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க