`சின்னத்திரைக்கு 2 மாதம் பிரேக்' - இயக்குநர் சரண் படத்தில் இணைந்திருக்கும் நடிகை ராதிகா! | Actress Radhikaa joined director saran's new film

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (20/03/2019)

கடைசி தொடர்பு:16:50 (20/03/2019)

`சின்னத்திரைக்கு 2 மாதம் பிரேக்' - இயக்குநர் சரண் படத்தில் இணைந்திருக்கும் நடிகை ராதிகா!

ராதிகா - ஆரவ்


இரண்டு மாதங்கள் பிரேக் எடுக்கப்போவதாக நடிகை ராதிகா அறிவித்த பிறகு, அவரின் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் திரும்பி நடிக்க வரும்படி வற்புறுத்திவருகின்றனர். சந்திரகுமாரி தொடரில் நடித்துவந்த ராதிகா, திடீரென பிரேக் எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் திரும்ப சின்னத்திரைக்கு வர வேண்டுமெனப் பலரும் போனிலும், நேரிலும், மெயில் மூலமாகவும் கடந்த ஒரு வார காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அன்புக்கு நன்றி. மீண்டும் விரைவில் வருவேன்' எனப் பதிவிட்டிருந்தார்.  தற்போது அவர், இயக்குநர் சரண் படத்தில் இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

raathikaa

'காதல் மன்னன்', 'அமர்களம்', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்', 'முனி', 'அசல்' எனப் பல முன்னணி ஹீரோக்களை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சரண்.  2017-ம் ஆண்டு, ஆயிரத்தில் இருவர் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். தற்போது அவர் இயக்கிவரும் படம், 'மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.  இதில், 'பிக் பாஸ்' ஃபேம் நடிகர் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம், கிட்டத்தட்ட 'வசூல் ராஜா  எம்.பி.பி.எஸ்' படத்தின் டைட்டிலை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. 

ராதிகா - ஆரவ்

இந்தப் படத்தில், ஆரவ் மார்கெட் ராஜாவாக வலம்வருகிறார். ரயில்வே கான்ட்ராக்டர் மற்றும் லோக்கல் டானாக நடிக்கிறார். ஆரவ்-வுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை  காவ்யா தாப்பர் (Kavya Thapar) நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், யோகி பாபு, 'பாகுபலி' படத்தில் காலகேயனாக நடித்த பிரபாகர் போன்றோர் நடித்துவருகின்றனர். தற்போது, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார் ராதிகா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க