`முதன்முறையாக ஹன்சிகாவுடன் இணையும் ஆதி!' - சயின்ஸ் ஃபிக்‌ஷனாக உருவாகும் புதிய படம் | hansikaa's next movie titled partner

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (20/03/2019)

கடைசி தொடர்பு:21:27 (20/03/2019)

`முதன்முறையாக ஹன்சிகாவுடன் இணையும் ஆதி!' - சயின்ஸ் ஃபிக்‌ஷனாக உருவாகும் புதிய படம்

இயக்குநர் ஜமீல் இயக்கும் `மகா' படத்தில் நீண்ட நாள் கழித்து ஹன்சிகாவுடன் சிம்பு நடித்து வருகிறார்.  

ஹன்சிகா

தற்போது, ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆதியும் நடிகை ஹன்சிகாவும் இணைந்து நடிக்கவுள்ளனர். குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பாலக் லல்வாணி இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் இயக்குநர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், vtv கணேஷ், ஜான்விஜய், இயக்குநர் ரவிமரியா, `டைகர்'தங்கதுரை ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு `பார்ட்னர்' எனத் தலைப்பிட்டுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்

பார்ட்னர்

இயக்குநர் சற்குணம், டோரா படத்தில் தாஸ் ராமசாமி ஆகியோரின் இணை இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது, `` `பார்ட்னர்' முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேன்டசியாகவும் இருக்கும். ஹன்சிகா மற்றும் ஆதிக்கு மிக முக்கியமான படமாக இது இருக்கும்." என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.