ப்ரூஸ் லீ-யுடன் சண்டை போடும் டிக்காப்ரியோ - ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் டீசர் | Teaser of Quentin Tarantino’s Once Upon a Time in Hollywood

வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (20/03/2019)

கடைசி தொடர்பு:21:38 (20/03/2019)

ப்ரூஸ் லீ-யுடன் சண்டை போடும் டிக்காப்ரியோ - ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் டீசர்

'ஒன்ஸ் அப்பான்  எ டைம் இன் ஹாலிவுட்' (Once Upon a Time in Hollywood) படத்தின் டீசர் இன்று வெளியானது.  

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

கடந்த 30 ஆண்டுகளில், சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் பிரியமான ஒரு பெயர் என்றால் அது, அமெரிக்க இயக்குநர் குவென்டின் டொரன்டினாவின் பெயர்தான். இவர் முன்னர் இயக்கிய, 'ஜாங்கோ அன்செய்ண்டு' படத்தின் நாயகன் டிகாப்ரியோ, இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் நாயகன் பிராட் பிட் இருவரும்தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். படத்தில், டிவி நடிகர் ரிக் டல்டனாக டிகாப்ரியோவும் அவரது ஸ்டன்ட் டூப் கிளிஃப் பூத்தாக பிராட் பிட்டும் நடிக்க  இருக்கிறார்கள். 

leonardo dicaprio

1960-களில் மேன்ஷன் ஃபேமிலி என்னும் கல்ட் குழு பிரபல இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின்  மனைவி ஷாரோன் டேட்  மற்றும் சில பிரபலங்களைக் கொடூரமாகக் கொல்கின்றனர். மறைந்த நடிகை ஷாரோன் டேட்டாக மார்கட் ராபி நடிக்கிறார். படம், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகை உமா துர்மனின் மகள் மாயா ஹாக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

 

 

 

10 படங்களை இயக்கியதுடன்  தன் திரையுலக வாழ்விற்கு குட்பை சொல்கிறார், குவென்டின் டாரண்டினோ. இப்படம் அவரது ஒன்பதாவது படம்  என்பது குறிப்பிடத்தக்கது