இந்துக்களில் ராவணன், இஸ்லாமில் இப்ளீஸ், கிறுத்துவத்தில்... - மோகன்லாலின் அரசியல் அதிரடி 'லூசிஃபர்'! | Mohanlal-Prithviraj's political thriller Lucifer trailer out

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (20/03/2019)

இந்துக்களில் ராவணன், இஸ்லாமில் இப்ளீஸ், கிறுத்துவத்தில்... - மோகன்லாலின் அரசியல் அதிரடி 'லூசிஃபர்'!

மலையாளத் திரையுலகில் முக்கியத் திரைப்படமாகக் கருதப்படும் `லூசிஃபர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.  

மோகன் லால்

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இப்படத்தில் மல்லுவுட்டின் டாப்ஸ்டார் மோகன்லால், மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய், கலாபவன் சஜோன், ஜான் விஜய் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்டீபன் நெடும்பல்லி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மோகன் லால். இவருக்கு வில்லனாக விவேக் ஓப்ராய் நடித்துள்ளார்.  

லூசிஃபர்

முரளி கோபி கதை, திரைக்கதை எழுதியுள்ள இதற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சம்ஜித் முஹமத் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார் ஸ்டன்ட் சில்வா. அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் இந்தத் தேர்தல் சீசனுக்கு ஒரு விருந்தாய் அமையவுள்ளது. உலகம் முழுவதும் மார்ச் 28 ம் தேதியன்று வெளியாகவுள்ள இந்தப் படம், மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.