சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்! லைகா தயாரிப்பில் #SK17 | vignesh shivn, sivakarthikeyan, anirudh to join for the first time

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (21/03/2019)

கடைசி தொடர்பு:12:40 (21/03/2019)

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்! லைகா தயாரிப்பில் #SK17

`போடா போடி', `நானும் ரௌடிதான்', `தானா சேர்ந்த கூட்டம்' படங்களை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

sk17

 பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, `எம்.ராஜேஷ் இயக்கத்தில் `மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது, `இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் `ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன்

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். வருகின்ற ஜூலை மாதம்  இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அடுத்த வருடம் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அறிவிக்கப்படவுள்ளது. இப்படத்திற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாள்கள் நடந்துவந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.