`வரலாற்றை மாற்ற நினைத்தால் அது மன்னிப்புக்கு உகந்ததல்ல' - மோடி பயோபிக் குறித்து சித்தார்த்! | Actor Siddharth Tweet About PM Narendra Modi Trailer

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:15:10 (21/03/2019)

`வரலாற்றை மாற்ற நினைத்தால் அது மன்னிப்புக்கு உகந்ததல்ல' - மோடி பயோபிக் குறித்து சித்தார்த்!

 பயோபிக் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்போது சர்ச்சைகளும், பாராட்டுகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. காந்தி, மேரிகோம், சஞ்சய் தத் போன்ற பலரின் பயோபிக் வரிசையில் தற்போது தயாராகியிருக்கிறது பிரதமர் மோடியின் பயோபிக். படத்திற்கு பி.எம் நரேந்திர மோடி எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

 

 

 

நடிகர் விவேக் ஓபராய் இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ளார்.  பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.  மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் வெளியாகியுள்ளன. இந்த ட்ரெய்லருக்கு நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

சித்தார்த்

அதில், "#PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கும் நமது இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது, #Jayalalithaa அவர்களின் வாழ்க்கையை வைத்து வரவிருக்கும் படங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

 #PMNarendraModiTrailer மோடி எப்படி ஒற்றை ஆளாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை துடைத்தெறிந்தார் என்பதைச் சொல்லவில்லை. சிக்குலார், லிப்டார்ட், கம்மி, நக்சல்கள் மற்றும் அந்த நேருவின் சதியைப்போல தோன்றுகிறது. #IstandwithModi

 

 

மோடி

 

வரலாற்றைப் பற்றி தெரியவில்லையென்றால் அது மன்னிப்புக்குரியது. ஆனால், வரலாற்றை மாற்ற நினைத்தால், அது மன்னிப்புக்கு உகந்ததல்ல.