'விஜய் 63' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்! | bollywood actor aboard in thalapathy 63

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (21/03/2019)

கடைசி தொடர்பு:17:16 (21/03/2019)

'விஜய் 63' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தவிர, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார், பாடலாசிரியர் விவேக். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஒரு பெரிய பிரபலம் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அந்த கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இவர், 'ஆரண்ய காண்டம்' என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங் வடசென்னை பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தவிர, கதிருக்கு ஜோடியாக 'ஜருகண்டி' படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க