இரட்டை வேடத்தில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் - பாலிவுட் படத்தின் அப்டேட் | Keerthy Suresh acts in a dual role for Bollywood film

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (21/03/2019)

கடைசி தொடர்பு:18:35 (21/03/2019)

இரட்டை வேடத்தில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் - பாலிவுட் படத்தின் அப்டேட்

கீர்த்தி சுரேஷ், தன் முதல் பாலிவுட் படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. ஆனால், முதல் முறையாக அவர் அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல்.

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான 'பதாய் ஹோ'வின் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இந்தப் படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் 'கோச்'சான சையது அப்துல் இப்ராஹிம்மின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது.

கீர்த்தி சுரேஷ்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1956 -ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்குக் காரணம் சையது தான். அவர் வாழ்க்கை நிகழ்வுகளும், இந்திய கால்பந்து அணியின் பொற்காலமான 1950-களும் இந்தப் படத்தில் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

இதில், கீர்த்தியின் பாத்திரங்கள் இருவேறு தோற்றங்களில் இருக்கும். மிக இளவயது தோற்றம் ஒன்றும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார். ஆனால், 'நடிகையர் திலகம்' படத்துக்காக செய்ததுபோல இந்தப் படத்தில் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. தன் நடிப்பின் மூலமாகவே வயது முதிர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்று கீர்த்தி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவின் விளையாட்டுத் துறையில் பெரிதும் அறியப்படாத பக்கங்களைப் பற்றிய படத்தில் நடிப்பதே பெருமையாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பட இயக்குநர் அமித் ஷர்மாவின் முந்தைய படமான, 'பதாய் ஹோ'வின் தமிழ் ரீமேக் உரிமையையும் போனி கபூர் தான் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.