கன்னடத்தில் ரீமேக்காகும் 'பரியேறும் பெருமாள்!' | pariyerum perumal will remake in kannada

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (21/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (21/03/2019)

கன்னடத்தில் ரீமேக்காகும் 'பரியேறும் பெருமாள்!'

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம், 'பரியேறும் பெருமாள்'. இதில், கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மைத்ரேயா

இந்தப் படத்திற்காக பல இடங்களில் 2018 -ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார், மாரி செல்வராஜ். தற்போது, இந்தப் படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இந்தப் படத்தை காந்தி மாணிக்கவாசகம் என்பவர் இயக்க உள்ளார். இவர், தமிழில் வெளியான 'களவாணி மாப்பிள்ளை' படத்தை இயக்கியவர். இதில் ஹீரோவாக, மைத்ரேயா என்பவர் நடிக்கிறார். இவர், ஏவிஎம் குடும்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்திற்கான தொடக்க விழா பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க