`ஆர்யாகிட்டயே அதைப்பற்றி கேட்பது சரியா இருக்காதுனு விட்டுட்டேன்!' - நடிகை ஆனந்தி அஜய் | Will ask apology to arya, says actress ananthi ajay

வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (21/03/2019)

கடைசி தொடர்பு:11:51 (22/03/2019)

`ஆர்யாகிட்டயே அதைப்பற்றி கேட்பது சரியா இருக்காதுனு விட்டுட்டேன்!' - நடிகை ஆனந்தி அஜய்

ஆனந்தி அஜய்


சின்னதிரையில், ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர் ஸ்டார், ஜி தமிழில் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ் என வலம்வந்தவர் ஆனந்தி. ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடித்த 'மீகாமன்', பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் ஆனந்தி. கடந்த வருடம் மார்ச் மாதம் 2-ம் தேதி, அஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது, அவருக்கு ஒன்றரை வயது மகன் ஆர்யாவீர் கையில் தவழ்ந்துகொண்டிருக்கிறார். 

ஆனந்தி

அஜய், ஆனந்தி தம்பதி, தங்கள் குழந்தைக்கு நடிகர் ஆர்யா வந்து பெயர் வைத்ததால், குழந்தைக்கு ஆர்யாவீர் எனப் பெயர் சூட்டினர். இவ்வளவு முக்கியத்துவம்பெற்ற அஜய், ஆனந்தி தம்பதி, ஆர்யாவின் திருமணத்தில் ஆப்சன்ட். ஏனென்று விசாரித்தோம். 

''நிஜமாகவே மனசு வருத்தமா இருக்கு. ஆர்யா எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்போல இருப்பவர். அவருடைய திருமணம் சாயிஷாவுடன் நடக்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. எப்போதும்போல அதுவும் வதந்தினு நினைத்தோம். என்ன இப்படி சொல்றாங்க. இதை அவர்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமானு நினைத்தோம். ஆர்யாகிட்டயே அப்படிக் கேட்பது நல்லா இருக்காதுல்ல, அதான் விட்டுட்டோம்.

ஆனந்தி

 அதன்பிறகு,  கடந்த பிப்ரவரி 14-ம் தேதி, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பிறகுதான் அவருக்கு வாழ்த்து சொன்னோம். திருமணத்திற்கான அழைப்பிதழும் கொடுத்தார். திருமண நாள் அன்று என் மகனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது. சென்னையில் நடந்திருந்தால்கூட சென்றிருப்போம். ஐதராபாத்தில் நடந்ததால் போக முடியவில்லை. 

ஆனந்தி அஜய்

வெயிட் பண்ணி, அவருக்கு சரியானவங்க கிடைச்சிருக்காங்க. அவரை நிறையப் பேர் 'எப்போது கல்யாணம்...' எனக் கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். 'எங்கவீட்டு மாப்பிள்ளை' ஷோ வந்தபோதுகூட இதேபோல பேச்சு வந்தது. இப்போது, ஃபேமிலிக்கும் பிடிச்சிருக்கு. அதுதானே முக்கியம். 

எப்ப கல்யாணம் என்பதைத் தாண்டி, இப்பவாவது கல்யாணம் முடிந்ததேனு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தது. இரண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அவரை நேரில் சந்திக்கும்போது ஒரு சாரி சொல்லணும்'' என்று முடித்தார் ஆனந்தி. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க