சயீஷா-ஆர்யாவின் தேனிலவு புகைப்படங்கள்! | arya sayyesha couples release the honeymoon pictures

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (22/03/2019)

சயீஷா-ஆர்யாவின் தேனிலவு புகைப்படங்கள்!

முரட்டு சிங்கிளாக இருந்த ஆர்யா, சில தினங்களுக்கு முன்பு நடிகை சயீஷாவை ஐதராபாத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் கரம்பிடித்தார். இவர்கள் திருமணத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் நேரில் சென்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவந்தனர். 

ஆர்யா

ஆர்யாவுக்கும் சயீஷாவுக்கும் திருமணம் என்ற செய்தி, இணையத்தில் முதலில் வதந்தியாகவே வலம்வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஆர்யா திருமணம் குறித்து ட்வீட் தட்டிவிட்டார். இவரின் பதிவுக்கு சினிமாவைச் சேர்ந்த பல திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

சயீஷா


மேலும், ஐதராபாத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்த கையோடு, சென்னையில் எளிமையாக வரவேற்பு நிகழ்ச்சியையும் இந்தத் தம்பதிகள் நடத்திமுடித்தனர். இந்நிலையில், புதுமணத் தம்பதிகள் இருவரும் தற்போது ஹனிமூன் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், தேனிலவு சென்ற இடத்தில் இவர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதில், இரண்டு புகைப்படங்களை சயீஷா ட்விட்டரில் பதிவுசெய்திருக்கிறார். அதில், கேப்ஷனாக' Soaking in the sun with my love! ☀️Pic courtesy- Husband ' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன. சக்தி செளந்தரராஜன் இயக்க இருக்கும் 'டெடி' படத்தில் ஆர்யா, சயீஷா இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க