தடை வாங்கிய பாபி சிம்ஹா!- வெளியாகுமா அக்னி தேவி? | bobby simha filed a case against his film agni devi

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (22/03/2019)

கடைசி தொடர்பு:11:55 (22/03/2019)

 தடை வாங்கிய பாபி சிம்ஹா!- வெளியாகுமா அக்னி தேவி?

`சென்னையில் ஒரு நாள் 2' படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஜான் பால்ராஜ், சாம் சூர்யா என்பவருடன் இணைந்து இயக்கியிருக்கும் படம், `அக்னி தேவி'. இதில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜேஷ் குமார் நாவலை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சியாண்டோ ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இயக்குநரே தயாரித்துள்ளார்.

பாபி சிம்ஹா

இன்று (மார்ச் 22) வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் , ``பல இடங்களில் என் முகத்தை மார்ஃபிங் செய்துள்ளனர், டிரெய்லரில் வந்த குரலும் தன்னுடையதில்லை"  என்று ஜான் பால்ராஜ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் உண்மைத் தன்மையை கண்டறியும் வரைபடத்தை வெளியிடக்கூடாது என படத்துக்குத் தடைவாங்கியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாபி சிம்ஹா கூறுகிற நிலையில், இன்று படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்து திரையரங்குகளுக்கு படங்களை அனுப்பும் கியூப் நிறுவனத்திடம் பேசும்போது, `படம் தடை செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு நீதிமன்ற ஆணையும் வரவில்லை' எனத் தெரிவித்துள்ளது. இப்படத்தின்  வெளியீட்டில் எந்தப் பிரச்னையும் இருக்காது எனத் தெரிகிறது.  

இதுகுறித்து பாபி சிம்ஹா கூறுகையில், ``நீதிமன்ற உத்தரவை தாண்டியும் படத்தை ரிலீஸ் செய்றாங்கனா, இது நீதிமன்ற அவமதிப்பு. படக்குழு பின்னாடி ஏதோ அரசியல் இருக்குனு தெளிவா தெரியுது. இதை சட்டப்படி பார்த்துக்குறேன்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க