`அநேகமா இதுதான் என்னுடைய அறிமுகப் படமா இருக்கும்’ - வாணி போஜன் | vani bojan shares about her film wtih vaibhav

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:16:20 (22/03/2019)

`அநேகமா இதுதான் என்னுடைய அறிமுகப் படமா இருக்கும்’ - வாணி போஜன்

`தெய்வமகள்’ வாணி போஜன் வைபவ் ஜோடியாக புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ளார். படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார். இதுதொடர்பாக வாணி போஜனிடம் பேசினோம்.

வாணி போஜன்

`தெய்வ மகள்’ சீரியல் முடிஞ்சதுமே `இனி முழுசா சினிமாவுல கவனம் செலுத்தலாம்’னு நினைச்சேன். நினைச்ச கொஞ்ச நாள்லயே `N 4’னு ஒரு படத்தில் கமிட் ஆனேன். கடற்கரையையொட்டிய ஸ்லம்ல நடக்கற கதை அது. ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. அந்தப் படமும் அடுத்த சில மாதங்கள்ல வெளியாகிடும்னு நினைக்கிறேன்.

வாணி போஜன்

`N 4’தான் என்னோட அறிமுகப்படம்னு நினைச்சிட்டிருந்த வேளையில, நிதின் சத்யா தயாரிக்கிற ஒரு படத்துல ஹீரோயினா வாய்ப்பு கிடைச்சிருக்கு. வைபவ் ஜோடியா நடிக்கிறேன். நிதின் எனக்கு ரொம்ப நாள் ஃப்ரண்ட். இந்தப் படத்தின் கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு அவர்தான் நினைச்சிருக்கார். கதை எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதனால உடனே சரி சொல்லிட்டேன்’’ என்கிறார்.

`50 சதவிகித ஷூட்டிங் முடிந்து விட்ட படத்தின் கதை த்ரில்லர் சப்ஜெக்ட் என்கிறார்களே’ எனக் கேட்டதற்கு, `அப்படியா’ என எதிர்க் கேள்வி கேட்டவர், `தெய்வமகள்’ சீரியல்ல தாசில்தார் சத்யாவாக அதிரடி காட்டிய போதே, என்னோட சினிமா அறிமுகம் ஒரு மாஸான படமா இருந்தா நல்லா இருக்கும்ல’னு நினைச்சிருக்கேன். அநேகமா இந்தப் படம்தான் சினிமாவுல என்னோட அறிமுகப்படமா இருக்கும். ஆனா படத்தின் கதை த்ரில்லர் சப்ஜெக்டானெல்லாம் நீங்க கேக்கறது என் வாயைப் பிடுங்கத்தான்னு தெரியுது. ஸோ, மூச் விட மாட்டேன். அதேநேரம், என்ன கேரக்டரோ அதுக்கு நாம பொருந்துவோம்னு நினைக்கிறாங்க இல்லையா, அவங்களோட நம்பிக்கையை நான் வீண் போக விட மாட்டேன்’ என்கிறார்.

பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கிற இந்தப் படத்தில் வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.