`போர் வேண்டாம்; அன்பு புரியுங்கள்' - கரண்ஜோஹர் குறித்து ட்விட்டரில் ஷாருக்கான்! | Shame On Karan Johar trends online

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (23/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (23/03/2019)

`போர் வேண்டாம்; அன்பு புரியுங்கள்' - கரண்ஜோஹர் குறித்து ட்விட்டரில் ஷாருக்கான்!

கரண் ஜோஹர்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நிகழ்ச்சிதொகுப்பாளர், இப்படி பல்வேறு முகங்களைக்கொண்டவர் கரண் ஜோஹர். 1998-ம் ஆண்டு முதல் படங்களை இயக்கிவருகிறார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான `குச் குச் ஹோதா ஹைய்’ திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. `கபி குஷி கபி கம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. இதுதவிர, தனியார்தொலைக்காட்சியில் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கரண் ஜோஹர். இவர் கரண் ஜோஹர் - ஷாருக்கான் காமினேஷனில் வெளியான படங்கள் நிச்சயம் `ஹிட்’ அடிக்கும் என்று பரவலான கருத்தும் நிலவி வந்தது. 'தர்மா புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.  

ஷாருக்கான்

அந்த வகையில் கடந்த 21-ம் தேதி இவர் தயாரித்த கேசரி படம் வெளியானது. அக்‌ஷய் குமார், ப்ரீனித்தி சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகின. இதனிடையே, ரசிகர் ஒருவர் ஷாருக்கானின் `ஜீரோ’ படத்தையும், அக்ஷய் குமாரின் `கேசரி’ படத்தையும் ஒப்பிட்டு கடுமையான விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர், `ஹோலி பண்டிகையில் வெளியான கேசரியின் அரைநாள் வசூல்தான், தீபாவளியன்று வெளியான `ஜீரோ’ படத்தின் மொத்த வசூல்” என்று தெரிவித்திருந்தார். இதனை கரண்ஜோஹர் லைக் செய்திருந்தது, ஷாருக் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 22,000-க்கும் அதிகமானோர் #Shameonyoukaranjohar என்ற ஹேஷ்டேக்கில் அவரை திட்டி தீர்த்தனர்.

ரசிகர்களின் ஆவேசத்தை கட்டுபடுத்தும் வகையில் ஷாருக் தனது ட்விட்டரில்,``கரண்ஜோஹர் தொழில்நுட்ப ரீதியில் தடுமாறுபவர். ஆனால் அவருக்கு உடைகள் தேர்வில் நல்ல ரசனை உள்ளது. ட்விட்டரும் வாழ்க்கை போலத்தான்.  எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல் இரண்டிலும் கிடையாது. அதனால் தவறுகள் இயற்கையானவை. மேலும் அவரது விரல்கள் தடிமனானவை. அனைத்தையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளுங்கள். போர் வேண்டாம்;அன்பு புரியுங்கள். அது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது" என பதிவிட்டுள்ளார்.