`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்! | Nayanthara's Kolaiyuthir Kaalam Movie Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (23/03/2019)

கடைசி தொடர்பு:21:52 (23/03/2019)

`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்!

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்‘ டிரெய்லர் வெளியாகியுள்ளது.

'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் கொலையுதிர் காலம். படத்தை யுவன் ஷங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள படப்பிடிப்பில், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தமன்னா, பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடரவிருப்பதாகச் சொல்லப்பட்டது. படம் வெளிவருமா என்று சந்தேகம் நிலவி வந்தது. 

நயன்தாரா

இந்தநிலையில் இந்த படத்தை எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. த்ரில்லர் களத்தில் படமாக்கப்பட்டிருக்கும் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க