`இன்னுமா தண்டனை கொடுக்கவில்லை?' - பொள்ளாச்சி சம்பவம் குறித்து வேதனைப்படும் விஜய் சேதுபதி! | actor vijay sethupathi worried about pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (24/03/2019)

கடைசி தொடர்பு:14:31 (24/03/2019)

`இன்னுமா தண்டனை கொடுக்கவில்லை?' - பொள்ளாச்சி சம்பவம் குறித்து வேதனைப்படும் விஜய் சேதுபதி!

பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி வேதனைத் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி குற்றவாளிகள்

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை மூன்று நாள் காவலில் எடுத்து முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ், திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பிய நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. அவரும் எழுத்துப்பூர்வ வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இவ்விகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அன்று திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் இல்லை என திடீர் வாதம் கிளம்பியுள்ளது. இதனால் வழக்கு திசை மாறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

விஜய் சேதுபதி

இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சூப்பர் டீலக்ஸ் பட விழாவில் பேசிய அவர் இதுகுறித்து, ``இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னுமா தண்டனை கொடுக்கவில்லை. இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு குழந்தைக்குக் கூட அது தவறு என்று தெரியும். இந்த சம்பவத்தில் சிலர் பெண்களைக் குறை கூறுகிறார்கள். அது மிகவும் தவறானது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை என்னால் பத்து விநாடிகள் கூடக் கேட்க முடியவில்லை. அதற்கே மனது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது" என வேதனைத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க