சூர்யா - செல்வராகவன் மேஜிக்கில் உருவாகியுள்ள `என்.ஜி.கே' எப்போது ரிலீஸ்? | surya - selvaraghavan's NGK to be released on this date

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (25/03/2019)

கடைசி தொடர்பு:17:50 (25/03/2019)

சூர்யா - செல்வராகவன் மேஜிக்கில் உருவாகியுள்ள `என்.ஜி.கே' எப்போது ரிலீஸ்?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்.ஜி.கே' படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது. 

சூர்யா

 

`தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `NGK'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக  சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காதலர் தினத்தன்று வெளியான படத்தின் டீசர் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் அமைந்தது.   

இதைத் தொடர்ந்து படத்துக்கான டப்பிங் ஆரம்பித்துவிட்டதாகவும் படத்தின் ரிலீஸ் தேதி இன்னுமொரு வாரத்தில் வெளியிடப்படும்' எனத்  தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. 

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான இடங்களிலிருந்து நமக்குக் கிடைத்த செய்திப்படி மே 31-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. யுவன் சங்கர் ராஜா  இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஏப்ரல் மாதம் மத்தியில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிகிறது.