`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | ajith new movie release date in August

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (25/03/2019)

கடைசி தொடர்பு:17:38 (25/03/2019)

`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

`விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் திரைப்படம் `நேர்கொண்ட பார்வை'. `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் பரபரப்பாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. 

நேர்கொண்ட பார்வை

வக்கீல் கேரக்டரில் அஜித் நடிக்கும் இந்தப் படத்தில் வித்யா பாலன் மனைவி கேரக்டரில் நடிக்கிறார். ஷர்த்தா ஶ்ரீநாத் சில தினங்களுக்கு முன்பு அவருடைய புதிய லுக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் அதிக வைரலானது. இந்த நிலையில், இந்தப் படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று திரைக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர். சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப் போயுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்தை மறைந்த ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சமீபத்தில் பா.விஜய் பாடல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க