`வாக்காளராக மட்டுமே இருப்பேன்!’ - பிரசாரம் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில் | i will participate as voter only in election says actor karthi

வெளியிடப்பட்ட நேரம்: 21:42 (25/03/2019)

கடைசி தொடர்பு:21:42 (25/03/2019)

`வாக்காளராக மட்டுமே இருப்பேன்!’ - பிரசாரம் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில்

`மக்களவைத் தேர்தலில் தான் ஒரு வாக்காளராக மட்டுமே இருப்பேன்’ என்று நடிகர் கார்த்தி விளக்கமளித்துள்ளார்.

கார்த்தி

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கணக்குள் முடிவடைந்துவிட்டன. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையும் வெளியாகிவிட்டது. மக்களிடையே தங்களது சாதனைகள், மற்றும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பதையெல்லாம் கொண்டு சேர்பதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முழுவேகத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றன.

``விஜயகாந்தை ஒருபோதும் விமர்சிக்கமாட்டேன்’’ என்ற குறிக்கோளுடன் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் திரைத்துறையைச் சேரந்த பலரும் பிரசார களத்துக்குள் குதிக்க உள்ளனர். இதனிடையே அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு நடிகர் கார்த்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் இந்தத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகச் சில தகவல்கள் வெளிவருகின்றன. உண்மையாகவே நான் பரப்புரையில் ஈடுபடவில்லை. இந்தத் தேர்தலில் வாக்காளராக மட்டுமே பங்கேற்கிறேன்!’’ என்று பதிவிட்டுள்ளார். ``நல்ல முடிவு. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடுங்கள்’’ என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.