`சதீஷ்னாலே அந்த சிம்பன்ஸிக்கு ஆகாது!’ - `கொரில்லா’ பட இயக்குநர் சாண்டி | sandy describes his behind the scene experience with sathish and chimpanzee in gorilla movie

வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (25/03/2019)

கடைசி தொடர்பு:21:54 (25/03/2019)

`சதீஷ்னாலே அந்த சிம்பன்ஸிக்கு ஆகாது!’ - `கொரில்லா’ பட இயக்குநர் சாண்டி

தமிழ் சினிமாவை ஆட்கொண்டிருக்கும் அனிமல் ஜானர் படங்களில் இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, யோகிபாபு, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கொரில்லா’வும் ஒன்று. 

கொரில்லா

தெலுங்கில் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, ஜீவாவுக்கு ஜோடியாக இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். `விக்ரம் வேதா’, `மேயாத மான்’ படங்களில் நடித்த விவேக் பிரசன்னா, `நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். தாய்லாந்தைச் சேர்ந்த `காங்’ என்ற சிம்பன்ஸி, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படம் வருகிற மே மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசரும் கவரும் வகையில் இருந்தது. 

Gorilla

சிம்பன்ஸி மற்றும் நடிகர்களுக்கு இருக்கும் நட்பு குறித்து நம்மிடம் சில சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் டான் சாண்டி, ``ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் ஜீவா சார் நுழைந்தவுடன், குரங்கு வந்து எகிறிக் குதித்து அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்ளும். ஹீரோயின் ஷாலினி பாண்டே என அனைவரிடமும் ரொம்ப  அன்பா இருக்கும். ஜீவா - காங்  இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி ஏற்பட்டுள்ளது. குரங்கு என்னவோ ஜாலியாகத்தான் ஜீவா-வுடன் விளையாடும். எனினும் காமெடியன் சதீஷைப் பார்த்தால் மூட் அப்செட் ஆகிவிடும். சதீஷ், சிம்பன்ஸி ஆகியோர் ஒன்றாக இடம்பெறும் காட்சி வந்தாலே சிம்பன்ஸி எனர்ஜி குறைந்திடும். ரெண்டு பேரையும் சமாளிச்சு சீன முடிக்கறதுக்குள்ள நமக்கு போதும் போதும்னு ஆகிடும்’’ என்றார்.