``பதவிய பறிச்சிட்டியேன்னு சொன்னார் ராதாரவி!'' - தயாரிப்பாளர் மதியழகன் | producer mathiyalagan says about that nayathara issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:27 (27/03/2019)

``பதவிய பறிச்சிட்டியேன்னு சொன்னார் ராதாரவி!'' - தயாரிப்பாளர் மதியழகன்

நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி வைத்த விமர்சனமும், ராதாரவியைக் கண்டித்து விக்னேஷ் சிவன், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட பிரபலங்களின் விமர்சனங்களும் தி.மு.க-விலிருந்து ராதாரவி இடைநீக்கம் செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து, தானே கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறியதும், நயன்தாரா அதற்கு விடுத்த பிரஸ் ரிலீஸும் பரப்பரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டுத்தீபோல் பரவிய இந்த விஷயத்துக்கு அடிப்படையாய் இருந்தது `கொலையுதிர் காலம்'  படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா. 

ராதா ரவி

நயன்தாரா பொது விழாக்களுக்கு வருவதில்லை எனத் தெரிந்தும், பிரமாண்ட விழாவாக நடத்தத் திட்டமிட்டு மேடையில் இருந்த அனைவரையும் அழைத்திருந்தது `கொலையுதிர்காலம்' படக்குழு. படத்தின் தயாரிப்பாளர் மதியழகனிடம் பேசினோம், ``சமீபமா, என்னோட எல்லாப் படமும் ஏதோ ஒரு சர்ச்சையில சிக்கிக்குது. `மஹா' படத்தோட போஸ்டர் ரிலீஸ் பண்றோம்,  அந்தப் படத்துல நடிக்கிறது ஹன்சிகா, அந்தப் படத்த எடுக்கிறது ஜமீல்னு ஒரு டைரக்டர். இவங்க இரண்டு பேர் ஓகே பண்ண ஒரு போஸ்டர் அதை நான் வெளியிடுறேன். பாத்தா அதுல ஒரு பிரச்னை சொல்றாங்க. `கொலையுதிர் காலம்' டிரெய்லர் வெளியிட்டா அதுல ராதாரவி சார் அப்படி பேசிட்டார். அது ஒரு சர்ச்சை. இதுல நம்ம வேலை ஒண்ணுமே இல்ல இவ்வளவு சீனியர் பேசும்போது நான் போயி எப்படி தடுக்குறதுனும் தெரியல. அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது. என்னோட ஃபேமிலியே அவர் ஏன் இப்படி பேசுனாருனு முகம் சுளிச்சாங்க."

இதுகுறித்து நயன்தாரா, ராதாரவி பேசுனாங்களா?

நயன்தாரா மேம் தரப்பு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இது நடக்காம இருந்துருக்கலாம்னு சொன்னாங்க. ராதாரவி சார் போன் பண்ணினார் `என்னோட பதவிய பறிச்சிட்டியேனு' சிரிச்சிக்கிட்டே சொன்னார். நீங்க அப்படி பேசீட்டீங்க. அதனாலதான் நான் சொன்னேன். அவரும் அதுக்கு வருத்தப்பட்டார். நயன்தாராட்ட நேர்ல போயிக்கூட பேசத் தயார்னு சொன்னார். 

நயந்தாரா

'கொலையுதிர் காலம்' படவிழாவுலதான் சர்ச்சை இருந்துச்சுனா படத்துலலையும் பிரச்னை இருக்கே?

டிரெய்லர் வெளியாகுற வரைக்கும் எனக்கு படத்துல இருக்குற பிரச்னைகள் தெரியாது. யுவன் ஷங்கர் ராஜா  டிவீட் பண்றவரைக்கும். இந்தப் படத்துல என்னப் பிரச்னைனு எனக்குத் தெரியாது. அவருக்கும் முதன்மை தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டயின்மென்ட்ஸ் நிறுவனத்துக்கும் பிரச்னை அது. இப்போது, அதை சரிசெய்து தருகிறோம் என பாம்பே நிறுவனம் கூறியுள்ளது. இருந்தும் அவங்க சொன்னதுனாலதான் யுவன் பெயரை டீசரிலிருந்து எடுத்துட்டேன். நவம்பர் மாசத்துல இருந்து எனது அக்ரீமெண்டுகளில் அனைத்தும் சரியாகவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நடித்து முடிக்கவேண்டிய பகுதிகள் இல்லாமலேயே படம் முழுமையாக இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தொடங்க யுவனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் இல்லையென்றால். சாம் சி.எஸ்  இசையமைக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் போயிக்கிட்டு இருக்கு.  

  மதியழகன்


இவ்வளவு பிரச்னைக்கும் முழுமுதற் காரணமா இருந்துட்டோமே' னு வருத்தப்பட்டீங்களா?

அந்த விழா முடிஞ்சதுல இருந்து இப்போ வரைக்கும் நான் சந்தோஷமாவே இல்ல. நம்ம காசுப்போட்டு வாங்குன படத்துக்கு அவ்வளவு செலவு பண்ணி விழா வச்சா, தேவையில்லாத விஷயம் பேசிட்டாங்க. ஒரே ஒரு சந்தோஷம் இனிமே பெண்களை கொச்சைப் படுத்துற மாதிரியான விஷயங்களை யாரும் பேசப் பயப்படுவாங்க. சக கலைஞரைப்பற்றி பேசுனவுடனே மொத்த சினிமாத் துறையே ஒற்றுமையாக நின்றது. ஒரு நல்ல விஷயமா பார்க்குறேன். இதுக்கெல்லாம்மேல ஒரு படத்தோட நிகழ்ச்சினா, இனி அந்தப் படம் சம்பந்தமாதான் கலந்துக்குற  எல்லோரும் பேசுவாங்க " என்றார்.