`விஜய் சேதுபதிக்கு ரஜினி படம் போன்ற மாஸ் டயலாக்ஸ்!” - விஜய் சந்தர் இயக்கும் `சங்கத் தமிழன்’ | rajini mass dialogue in vijay sethupathi new movie

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (28/03/2019)

கடைசி தொடர்பு:12:55 (28/03/2019)

`விஜய் சேதுபதிக்கு ரஜினி படம் போன்ற மாஸ் டயலாக்ஸ்!” - விஜய் சந்தர் இயக்கும் `சங்கத் தமிழன்’

நாளை, விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் திரைக்கு வருகிறது. சேதுபதி தற்போது, விஜய் சந்தர் இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து இந்தப் படத்தின் ஷூட்டிங் செல்கிறது. மேலும், இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

விஜய் சேதுபதி

 படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் ,ரஜினிக்கு வசனங்கள்  எழுதுவதுபோல மிகவும் மாஸாக படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். மேலும், படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், விஜய் சேதுபதி படத்தின் பெயரை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். 'சங்கத் தமிழன்' என்பது படத்தின் பெயராம். ஹைதராபாத் பகுதியில் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது சென்னையில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக, படத்தின் இயக்குநர் விக்ரம் மற்றும் தமன்னாவை வைத்து 'ஸ்கெட்ச்' படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்தப் படத்தில் காமெடி கேரக்டரில் சூரி நடிக்கிறார். நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

விஜய் சந்தர்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க