`பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டார்!'- துருக்கியில் நடந்த படப்பிடிப்பில் விஷால் காயம் | Vishal tossed from four wheeler bike and injured

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (28/03/2019)

கடைசி தொடர்பு:16:16 (28/03/2019)

`பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டார்!'- துருக்கியில் நடந்த படப்பிடிப்பில் விஷால் காயம்

விஷால்

நடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் துருக்கி சென்றுள்ளனர். இந்தப்படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனமாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைட்டெனட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முக்கியமான காட்சிகளை அங்கு 50 நாள்களுக்குப் படம்பிடிக்க உள்ளனர். இதில் தமன்னா, ஐஸ்வர்யா லஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் கடந்த வாரமே துருக்கி சென்றுவிட்டனர்

நான்கு சக்கரங்களைக் கொண்ட பைக்கில் விஷால் செல்வதாக காட்சி. இதைப் படமாக்கும்போது பைக்கிலிருந்து விஷால் தூக்கி எறியப்பட்டார். எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவத்தால் மொத்தப் படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது. விஷாலுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. விஷால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.