டொவினோ தாமஸ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! | Tovino Thomas's movie shooting started

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (29/03/2019)

கடைசி தொடர்பு:12:30 (29/03/2019)

டொவினோ தாமஸ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!

`மாரி 2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர், டொவினோ தாமஸ். மல்லுவுட்டில் தேர்ந்தெடுத்த சினிமாக்களில் நடிக்கக் கூடியவர். இவரது அடுத்த படமான `கல்கி' படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.  

டொவினோ தாமஸ்

`மாயாநதி', `தீவண்டி', `என்டே உம்மன்டே பேரு' போன்ற படங்களில் நடித்தவர், டொவினோ. தொடர்ந்து பல படங்களில் பிஸியாகி இருக்கும் இவர், தற்போது கல்கி படத்தில் பெரிய மீசையோடு போலீஸ் கதாபாத்திரமாக நடிக்கிறார். பிரவீன் பிராபரம் என்பவர் இந்தப் படத்தை இயக்க, சுஜின் சுஜாத்தன் இதற்குக் கதையும் திரைக்கதையும் எழுதியிருக்கிறார். இயக்குநரும் இவரோடு சேர்ந்து படத்திற்குக் கதை எழுதியிருக்கிறார். `லூகா' படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார், டொவினோ. தீவண்டி படத்தில் பணியாற்றிய கௌதம் ஷங்கர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிக் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிப்பு ஆலுவாவில் ஆரம்பமாகியிருக்கிறது. `ரணம்' படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.