Published:Updated:

`சாத்தானைப் பெருமைப்படுத்துகிறார்!' - மோகன்லாலின் `லூசிபர்’ படத்துக்கு கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு

'சாத்தானைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த சினிமா அமைந்துள்ளது. லூசிபர் என்பது சாத்தானின் பெயர்' என மோகன்லாலின் லூசிபர் சினிமாவுக்கு கிறிஸ்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

`சாத்தானைப் பெருமைப்படுத்துகிறார்!' - மோகன்லாலின் `லூசிபர்’ படத்துக்கு கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு

பிரித்திவிராஜ் தயாரிப்பில் மோகன்லால் நடித்த 'லூசிபர்' மலையாள திரைப்படம் நேற்று வெளியானது. இதற்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. லூசிபர் திரைப்படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில், ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், கேரள கிறிஸ்துவ டெமாக்ரசி என்ற அமைப்பு, லூசிபர் திரைப்படத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள கிறிஸ்துவ டெமாக்ரசி அமைப்பின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ்துவ சபையையும், கிறிஸ்துவின் புகழையும் களங்கப்படுத்துவதாக `லூசிபர்’ திரைப்படம் அமைந்துள்ளது.

`சாத்தானைப் பெருமைப்படுத்துகிறார்!' - மோகன்லாலின் `லூசிபர்’ படத்துக்கு கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு

கிறிஸ்துவ புனிதச் சடங்குகளை அவமானப்படுத்துவதுடன், சாத்தானைப் பெருமைப்படுத்தும்  விதமாகவும் இந்த சினிமா அமைந்துள்ளது. லூசிபர் என்பது சாத்தானின் பெயர். இதில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை உணர்ந்துகொள்ளும் அறிவை இறைவன் நமக்கு அருளட்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மோகன்லாலின் லூசிபர் சினிமாவுக்கு கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.