சிம்புவுக்கு ஜோடியாகும் இயக்குநர் பிரியதர்ஷன் மகள்! - `மாநாடு’ அப்டேட் | Kalyani Priyadharshan playing lead role with Simbu in Maanadu

வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (29/03/2019)

கடைசி தொடர்பு:19:03 (29/03/2019)

சிம்புவுக்கு ஜோடியாகும் இயக்குநர் பிரியதர்ஷன் மகள்! - `மாநாடு’ அப்டேட்

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் `மாநாடு'. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். 

கல்யாணி பிரியதர்ஷன் - மாநாடு

இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் மலையாள நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மகளான கல்யாணி பிரியதர்ஷன். 2017-ல் வெளியான `ஹலோ' எனும் தெலுங்குப் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான `வந்தா ராஜாவாதான் வருவேன்'. இதைத் தொடர்ந்து சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் அரசியல் காமெடியை மையமாக வைத்து ஒரு படம் வெளியாகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து, கடந்த வருடம் ஜூலை மாதம் படத்துடைய டைட்டில் 'மாநாடு' என்று அதிகாரபூர்வமான செய்தியையும் வெளியிட்டனர். அதற்குப் பின் படம் தொடர்பாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. தற்போது மீண்டும் 'மாநாடு' படத்துடைய வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. `மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்ற செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு. மேலும், 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் சிவகார்த்தியனை வைத்து இயக்கும் படத்திலும் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெல்கம் டு தமிழ் சினிமா!