`அம்மா போனால் சின்னம்மா... ஐயா போனால் சின்னய்யா..!' - `தர்மபிரபு' டீசர்  | yogi babu's Dharmaprabhu teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:57 (30/03/2019)

`அம்மா போனால் சின்னம்மா... ஐயா போனால் சின்னய்யா..!' - `தர்மபிரபு' டீசர் 

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம், `தர்மபிரபு'. இந்தப் படத்தின் டீசர் இன்று (29.3.2019) வெளியாகியிருக்கிறது. 

யோகி பாபு - தர்மபிரபு

யோகி பாபு எமதர்மராஜாவாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு. ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர்கள் இல்லாமல் கூட இப்போது படம் வெளியாகிவிடும் போல. ஆனால், யோகி பாபு இல்லாமல் படங்கள் வெளி வருவது இல்லை என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாக். காரணம் காமெடி கதாபாத்திரம் என்றாலே இயக்குநர்கள் நினைவுக்கு வரும் முதல் ஆள் யோகி பாபு. பல பெரிய ஹீரோக்களே இவர்களின் கால்ஷீட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு இவர் பிஸியோ பிஸி. இந்த நிலையில், எமதர்மனாக நடித்திருக்கும் இப்படத்தில் காமெடியோடு அரசியலும் பேசியிருப்பது டீசரில் இடம்பெறும் வசனங்களிலிருந்தே தெரிகிறது. படத்தில் மேலும் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.