வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கன்னடப் படத்தின் ஷூட்டிங்கில் தீ விபத்து! | Fire accident in Actress varalakshmi's kannada film shooting spot

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (30/03/2019)

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கன்னடப் படத்தின் ஷூட்டிங்கில் தீ விபத்து!

தமிழில் வித்தியாசமான கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது கன்னடத்தில் 'ரணம்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுனின் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடித்து வருகிறார். 

வரலட்சுமி

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரை அடுத்த பாகலூரு பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியின்போது எதிர்பாரதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. காட்சி அமைப்பின்படி கார் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சியைப் படமாக்கி கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் தீடிரென வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில், படப்பிடிப்பை அங்கே இருந்து பார்த்துக்கொண்டிருந்த 5 வயது குழந்தையும் அவரின் தாயும் உயிரிழிந்தனர். 

ரணம்

மேலும், காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீஸார். மேலும், விபத்து நடந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதியும் வாங்காமல் படக்குழு மெத்தனம் காட்டியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க