`சூப்பர் டீலக்ஸ்' படத்தை விமர்சிக்கும் நடிகர் நட்டி! | Actor natty says about 'super delux' movie

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:24 (01/04/2019)

`சூப்பர் டீலக்ஸ்' படத்தை விமர்சிக்கும் நடிகர் நட்டி!

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பக்ஸ் நடித்திருக்கும் இந்தப் படம் பலதரப்பட்ட விமர்சனங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் படத்தைக் கொண்டாடி வரும்வேளையில் மற்றும் சிலர் படம் குறித்து விமர்சித்து வருகின்றன.

நட்டி

இந்த நிலையில் `சதுரங்க வேட்டை'  நடிகர்  நட்டி `சூப்பர் டீலக்ஸ்' படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், ''அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்''. ''Super deluxe.... தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்னை ....'' என்று கேட்டிருக்கிறார்.

நட்ராஜ் ட்வீட்

நட்ராஜ் ட்வீட்

இதற்கு நெட்டிசன்கள் பலரும் பதில் கூறி வருகின்றனர். குறிப்பாக, இந்தப் படம் 'A' சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் தியாகராஜன் அவரின் முதல் படம் 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் `சூப்பர் டீலக்ஸ்' படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளிவந்த நாளிலிருந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க