`மற்ற கொடூர ஆவிகளுக்கு அனபெல் ஒரு வழிகாட்டி!' - திகிலூட்டும் #AnnabelleComesHome டிரெய்லர் | Annabelle Comes Home First Trailer released by Warner Bros.

வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:04 (01/04/2019)

`மற்ற கொடூர ஆவிகளுக்கு அனபெல் ஒரு வழிகாட்டி!' - திகிலூட்டும் #AnnabelleComesHome டிரெய்லர்

தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் டிரெய்லரின் மூலம் 'தி கான்ஜுரிங்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான வாரன் தம்பதிகளைச் சுற்றி இந்தக் கதையும் நடக்கும் என்று தெரிகிறது.

`மற்ற கொடூர ஆவிகளுக்கு அனபெல் ஒரு வழிகாட்டி!' - திகிலூட்டும் #AnnabelleComesHome டிரெய்லர்

அனபெல் பட வரிசையில் மூன்றாவது பாகமான #AnnabelleComesHome படத்தின் முதல் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

Annabelle Comes Home

2013-ம் ஆண்டு ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியான `தி கான்ஜுரிங்' திரைப்படம் ஹாரர் படங்களில் ஒரு கல்ட் ஹிட்டாக அமைந்தது. அதன் கதாபாத்திரங்கள் மற்றும் பின், முன் கதைகளை வைத்து 'தி கான்ஜுரிங் 2', 'அனபெல்', 'அனபெல்: கிரியேஷன்', 'தி நன்' போன்ற படங்கள் வெளிவந்து விட்டன. ஹாலிவுட் வரலாற்றில் முக்கியமான ஹாரர் ஃப்ரேன்ச்சைஸ்களில் ஒன்றாக இது தற்போது திகழ்ந்து வருகிறது. 

இந்த யுனிவர்ஸின் இந்த வருட ரிலிஸாக இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. The Curse of La Llorona என்கிற The Curse of the Weeping Woman என்ற படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்ததாக இந்த யுனிவர்ஸின் 7-வது படமாக, அனபெல் தொடரின் மூன்றாவது பாகமாக 'Annabelle Comes Home' படம் வரும் ஜூன் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

Annabelle Comes Home

தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் டிரெய்லரின் மூலம் 'தி கான்ஜுரிங்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான வாரன் தம்பதிகளைச் சுற்றி இந்தக் கதையும் நடக்கும் என்று தெரிகிறது. அந்தத் தம்பதியின் பெண் குழந்தையான ஜூடி வாரனையும் அவளின் பேபி சிட்டர்களையும் அனபெல் பொம்மை குறிவைக்கிறது. பாதுகாப்பாக வைக்கப்பட்ட அனபெல்லை தவறுதலாகத் திறந்து விடுவதால் மற்ற அனைத்து ஆவிகளையும் திரட்டி 'அனபெல்' எல்லோரையும் திகிலூட்டுவதாகப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் டிரெய்லரைக் காண...

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க