வேட்டி சட்டையில் கலக்கும் அமிதாப் பச்சன்! - `உயர்ந்த மனிதன்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் | sj suryah debuts in hindi

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:02 (01/04/2019)

வேட்டி சட்டையில் கலக்கும் அமிதாப் பச்சன்! - `உயர்ந்த மனிதன்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகிவரும் 'உயர்ந்த மனிதன்' படம்  மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராகவுள்ள `உயர்ந்த மனிதன்’ படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார்.  

எஸ்.ஜே.சூர்யா

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் முதன்முறையாக இப்படத்தின்மூலம் அறிமுகமாகி நடிக்கவுள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராகவுள்ள இந்தப் படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பைவ் எலமென்ட் புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்க, `கள்வனின் காதலி' இயக்கிய இயக்குநர் தமிழ்வாணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு `உயர்ந்த மனிதன்' எனப் பெயரிடப்பட்டது. 

அமிதாப் பச்சன்

இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மூலம் இந்தியில் முதன் முறையாக நாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். கடைசியாக இந்தியில் நடித்த `பத்லா' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், `உயர்ந்த மனிதன்' படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது அவரும் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்திருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவர் கொடுத்த கால்ஷீட் 40 நாள்கள் ’ எனக் கூறினார்.  

இதற்காகச் சென்னையில் நடந்த விழாவில் வீடியோ மூலம் ரஜினி டைட்டிலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.