`நான் அம்மாவாகப்போகிறேன்!' - நடிகை எமி ஜாக்சன் மகிழ்ச்சி | Amy Jackson Is Expecting first child

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (01/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (01/04/2019)

`நான் அம்மாவாகப்போகிறேன்!' - நடிகை எமி ஜாக்சன் மகிழ்ச்சி

'மதராசப்பட்டினம்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், நடிகை எமி ஜாக்சன். இந்தப் படம் இவருக்குக் கொடுத்த பெயரின் காரணமாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினியுடன் '2.0' படத்தில் நடித்தார். ஷங்கர், இந்தப் படத்தை இயக்கினார். இதற்கு முன்னதாகவே ஷங்கரின் 'ஐ' படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடித்திருந்தார். 

எமி ஜாக்சன்

இந்நிலையில், பாலிவுட் உலகில் சில படங்களில் நடித்த எமி, சமூக இணையத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில் அவர், `தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். 'இப்போதே, மொட்டைமாடியிலிருந்து நான் தாய்மை அடைந்த விஷயத்தை சத்தமாகச் சொல்ல வேண்டுமென்று தோன்றிருக்கிறது. இந்த உலகத்தில் யார் மீதும் வைத்திருக்காத தூய்மை அன்பை உன் மீது மட்டுமே வைத்திருக்கிறேன். நம்முடைய குழந்தையைக் காண காத்திருக்கிறேன்'' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், இவரின் வருங்கால கணவர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகிவருகின்றன. இங்கிலாந்தில் அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், எமி இந்தச் செய்தியை மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். 

எமி ஜாக்சன்

மேலும், எமியின் வருங்கால கணவர் ஜார்ஜ் பனயிட்டோ, இங்கிலாந்து தொழிலதிபர் ஆவார். இவருக்கு பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. இவருக்கும் எமிக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க