நரேந்திர மோடி பயோபிக்கிற்குத் தடை இல்லை! - டெல்லி உயர் நீதிமன்றம் | delhi high court dismisses pil against narendra modi biopic

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (01/04/2019)

கடைசி தொடர்பு:17:15 (01/04/2019)

நரேந்திர மோடி பயோபிக்கிற்குத் தடை இல்லை! - டெல்லி உயர் நீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவருகிறது. படத்துக்கு, 'பி.எம் நரேந்திர மோடி’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.  இந்தப் படத்தில், நரேந்திர மோடியாக  நடிகர் விவேக் ஓபராய்  நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த 'மேரி கோம்' படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

மோடி

மக்களவைக்கு, முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தப் படம்  வெளியாவதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது, இந்தப் படத்துக்கு தடைவிதிக்கவேண்டி காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ’பி.எம் நரேந்திர மோடி’ படத்துக்கு தடை கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. ஆக, இந்தப் படம் ஏப்ரல் 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க